புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான கால்கோல் விழா
கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான கால்கோல் விழா துணை சபாநாயகர் பங்கேற்றார்.;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி ஆவூர் ஊராட்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ஆவூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 15 வகுப்பறை ரூபாய் 3.20 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டும் பணிக்கான கால்கோல் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . பள்ளி தலைமை ஆசிரியை கீதா அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு ரூபாய் 3.20 கோடி மதிப்பீட்டில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த ஆவூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. 9 உயர்நிலைப்பள்ளி கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு வழங்கப்பட்டது . வேட்டவலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தாலும் ஆவூரிலும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவரப்பட்டது. கடந்த ஆட்சியில் பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆவூர் ஊராட்சி மன்ற தலைவர், ஊர் பிரமுகர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக இந்த பள்ளி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் கல்வி தரம் அதிகரித்துள்ளது.
கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் அதிக அளவில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி நூறு சதவீதம் தொடர்ச்சியாக தேர்ச்சி பெறுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் ,பெண்களின் மேற்படிப்புக்கு ரூபாய் ஆயிரம், கட்டணம் இல்லா பயணம் என பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் . இந்த திமுக ஆட்சியில் உங்களைத் தேடி பல எண்ணற்ற திட்டங்கள் வந்து கொண்டிருக்கிறது. பொது மக்களாகிய நீங்கள் இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விழாவில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ,துணைத் தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ,ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஒப்பந்தக்காரர்கள், பொதுமக்கள் ,பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.