கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் கிராம சபை கூட்டம்: துணை சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது

திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் கிராம சபை கூட்டம் தமிழக அரசு துணை சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது;

Update: 2021-10-02 11:10 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி வேடநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி  கலந்து கொண்டார். 

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட சட்டப் பேரவைத் துணைத் தலைவர்   இதன் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு,  ஒன்றியக்குழு துணைத்தலைவர் வாசுகி ஆறுமுகம்,  மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆறுமுகம்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள்,  வருவாய் அலுவலர்கள்,  பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News