அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகள்

மல்லவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை துணை சபாநாயகர் வழங்கினார்

Update: 2024-03-14 02:42 GMT

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய துணை சபாநாயகர்

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள மல்லவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டியை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள மல்லவாடி, நார்த்தாம்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 276 மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டியை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை தலைமை தாங்கினார் . மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் ரமணி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை சபாநாயகர் பிச்சாண்டி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டியை வழங்கி பேசியதாவது;

இந்த மல்லவாடி ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 132 மாணவிகளுக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 55 மாணவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நார்த்தாம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 32 பேருக்கும் 57 மாணவிகளுக்கும் மொத்தம் 276 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதில் பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கு மாதம் தோறும் 1000 வழங்கப்பட்டு வருகிறது . அதே போல் ஆண்கள் உயர்கல்வி படிப்பதற்கு மாதம் தோறும் 1000 வழங்குவதற்கு உண்டான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்காக இல்லம் தேடி கல்வி, கற்றல் கற்பித்தல், நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம், படிக்கும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ,ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ,மாணவ மாணவியர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News