நடிகர் விவேக் மறைவிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
கீழ்பென்னாத்தூரில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் நடிகர் விவேக் திரு உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில், பசுமை கலாம் இயக்கத்தின் நிறுவனரும் குணச்சித்திர நடிகருமான விவேக் மறைவை அடுத்து கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் அருகில் விவேக் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் உதவும் கரங்கள் அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள், அனைத்து கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்