திருவண்ணாமலை: கள்ளச்சாராய ஊரலை கண்டுபிடித்து அழித்த போலீசார்

1100 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை காவலர்கள் கண்டுபிடித்து கீழே ஊற்றி அழித்தனர்.;

Update: 2022-01-04 07:19 GMT

கள்ளச்சாராய ஊரலை கண்டுபிடித்து கீழே ஊற்றி அழித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் A.ராஜன் அவர்களின் மேற்பார்வையில், மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் சத்யாநந்தன், மற்றும் தனிப்படை காவலர்கள் வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆங்குனம் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆங்குனம் மலைக்கு அருகில் கள்ளாங்குத்து என்ற இடத்தில் மறைத்து வைத்திருந்த சுமார் 1100 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை கண்டுபிடித்து கீழே ஊற்றி அழித்தனர். இதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News