கீழ்பென்னாத்தூர் அருகே நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி விவசாயிகள் போராட்டம்
கீழ்பென்னாத்தூர் அருகே ராஜந்தாங்கல் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்.;
கீழ்பென்னாத்தூர் அருகில் ராஜந்தாங்கல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதில் பணியாற்றி வந்தவர் விவசாயி ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.
இந்தநிலையில் இன்று அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் மூடப்பட்ட ராஜந்தாங்கல் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அங்கேயே சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டனர். பின்னர் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.