வாக்குப்பதிவு இயந்திரம் பலத்த பாதுகாப்புடன் கீழ்பெண்ணாத்தூர் வந்தடைந்தது

கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இறக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

Update: 2021-03-11 15:45 GMT


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு தொடங்கிவைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய எட்டு சட்டமன்ற தொகுதிகளில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக 513 கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் 2885 வாக்குச் சாவடிகளாக உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 91 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர் முன்னிலையில் திறக்கப்பட்டு 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்கு பதிவு உறுதி செய்யும் இயந்திரம் உள்ளிட்டவைகளை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கீழ்பென்னாத்தூர் தேர்தல் அதிகாரி கண்ணப்பன் மற்றும் காவல்துறையினர் இறக்கி பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைத்தனர்.

Tags:    

Similar News