தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்களை வழங்கிய துணை சபாநாயகர்
கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்களை துணை சபாநாயகர் வழங்கினார்
கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் தூய்மை பணிகளுக்கு பேட்டரி வாகனங்களை துணை சபாநாயகர் வழங்கினார்
கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 27 ஊராட்சிகளுக்கு ரூ.84 லட்சம் மதிப்பில் 34 குப்பை வண்டிகள், பழங்குடியினா் 13 பேருக்கு ரூ.57 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்.
கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் காட்டுமலையனூர், கரிக்கலாம்பாடி, செவரப்பூண்டி, கனபாபுரம், வழுதலங்குணம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 13 பேருக்கு தலா ரூ.4 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டும் பணிக்கான உத்தரவுகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜபார், குப்புசாமி, ரங்கநாயகிஅருணாச்சலம், குப்புஜெயக்குமார், விஜயா சேகர், பரசுராமன், துணைத்தலைவர்கள் அவுல்தார், உமாதங்கராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவகாமிதேவேந்திரன், பாக்கியலட்சுமி லோகநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) அப்துல்கபார் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கீழ் பெண்ணாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் இனாம்காரியந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். அப்பள்ளியில் முதலமைச்சர் அவர்களின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ,திட்ட அலுவலர்கள் ,பொதுமக்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.