திமுக முன்னாள் அமைச்சர் பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பு
கீழ்பென்னாத்தூர் தொகுதியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் மசூதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட கீரனூர்,வேளானந்தல்,செல்லங்குப்பபம்,ஆவூர் ஆகிய பகுதிகளில் கீழ்பென்னாத்தூர் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி தீவிர பிரசாரம் மேற் கொண்டார்.
ஆவூர் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகளவு உள்ளனர். இஸ்லாமியர்கள் பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்ட திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற வேட்பாளருமான கு.பிச்சாண்டி தொழுகை முடியும் வரை காத்திருந்து பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார்.