திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஆய்வு;
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஞானசேகரன் அவர்கள் வாக்குப்பதிவு நாளன்று வாக்கு பதிவிற்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் வகையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், கூடுதல் ஆட்சியர் பிரதாப் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.