திமுக இளைஞரணி பேரணிக்கு துணை சபாநாயகர் தலைமையில் வரவேற்பு..!

கீழ்பெண்ணாத்தூரில் திமுக இளைஞரணி மோட்டார் சைக்கிள் பேரணிக்கு துணை சபாநாயகர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது;

Update: 2023-11-20 03:21 GMT

இளைஞர் அணியினருக்கு வரவேற்பு அளித்த துணை சபாநாயகர் பிச்சாண்டி

திமுக இளைஞரணி சார்பில் நீட் விலக்கு குறித்து வருகிற டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சேலத்தில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதயொட்டி கன்னியாகுமரியில் இருந்து மாநில அளவிலான இருசக்கர வாகன பேரணி கடந்த 15ஆம் தேதி திமுக இளைஞரணி தலைவரும் தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக பேரணி திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து இரு சக்கர வாகன பிரச்சார பேரணி கீழ்பெண்ணாத்தூர் வந்தடைந்தது.

அப்போது கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியம் சோமாஸ்பாடியில், பேரணிக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் ஆராய்ஞ்சி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் திரளான திமுகவினர், வந்திருந்த இளைஞர் அணியினருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுக அரசின் சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்களையும் பொதுமக்கள் வியாபாரிகளிடம் விநியோகித்தனர் . அதைத் தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் வாகன பேரணிக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது . அங்கும் பொதுமக்கள் வியாபாரிகளிடம் அரசின் சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

பின்னர் இரு சக்கர வாகன பேரணியினர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு புறப்பட்டு சென்றனர் .

இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் முருகையன், அன்பு, கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி தலைவர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் சிவகுமார், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள் ,துணை அமைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,உள்பட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News