மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர்

நாரியமங்கலத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 75 பேருக்கு நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.;

Update: 2022-09-02 06:23 GMT

மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகாவுக்குட்பட்ட நாரியமங்கலம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன் தலைமை தாங்கினார். சமூகபாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாசில்தார் சக்கரை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு 75 பேருக்கு ரூ.21 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வீடு வழங்கும் திட்டம், தையல் எந்திரம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

முகாமில் வருவாய் ஆய்வாளர் சுதா, ஊராட்சி மன்ற தலைவர் பாபு, துணைத்தலைவர் யசோதா கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ராஜேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News