மனு நீதி நாள் முகாமில் நல திட்ட உதவிகள் வழங்கிய துணை சபாநாயகர்
கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் நடந்த மனுநீதிநாள் முகாமில் நல திட்ட உதவிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.;
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் விருதுவிளங்கினான் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, தாசில்தார் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஷாப்ஜான் வட்ட வழங்கல் அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் மணிகண்டன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பேசினார். முகாமில் 19 நபர்களுக்கு குடும்ப அட்டைகளும், 51 பட்டா மாறுதல் இவை உள்பட வீட்டுமனை பட்டா என மொத்தம் 110 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன், வெறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்ரியா, வட்ட துணை ஆய்வாளர் சையத் ஜலால், கால்நடை உதவி மருத்துவர் பியூலா பெர்லின் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.