பயணியர் நிழற்குடை திறந்து வைத்த துணை சபாநாயகர் பிச்சாண்டி
துரிஞ்சாபுரம் ஊராட்சியில் பயணியர் நிழற்குடையை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.
துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள எரும்பூண்டி ஊராட்சியில் கூட்டுச்சாலையில் ரூபாய் பத்து லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள எரும்பூண்டி ஊராட்சியில் கூட்டு சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை தலைமை வகித்தார் .மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தார்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பன்னீர் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு புதிய பயணியர் நிழற்குடைய திறந்து வைத்தார் .இந்த புதிய பயணியர் நிழற்குடை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூபாய் 5 லட்சமும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூபாய் 5 லட்சமும் மொத்தம் 10 லட்சத்தில் இந்த பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது என துணை சபாநாயகர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு ,இன்ஜினியர் தமிழரசி, மாவட்ட அமைப்பாளர் காதர் பாஷா ,முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை ,ஒன்றிய செயலாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட கவுன்சிலர்கள் சகாதேவன் ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அப்பாசாமி , வட்டார வளர்ச்சி அலுவலர்க, மாவட்ட பிரதிநிதிகள், தொமுச நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய அமைப்பாளர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ,உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.