புதிய நியாய விலை கடைகள் திறந்து வைத்த துணை சபாநாயகர்

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் புதிய நியாய விலைக் கடைகளை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

Update: 2024-09-05 02:34 GMT

குத்துவிளக்கு ஏற்றி நியாய விலை கடையை திறந்து வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை அடுத்த டி. வலசை ஊராட்சிக்குட்பட்ட திருவாணைமுகத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடையினை திறந்துவைத்து பயனாளிகளுக்கு ரூ.4.28 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் டி.வலசை ஊராட்சிக்குட்பட்ட திருவாணைமுகத்தில் கூட்டுறவு துறை சார்பில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்புவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பனர்கள் ஞானசௌந்தரி மாரிமுத்து ஆராஞ்சி ஆறுமுகம் ஆணையாளர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஜெயம் அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி புதிய பகுதிநேர நியாயவிலைக் கடையினை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி வைத்தும் பொது விநியோக பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி விற்பனைனை துவக்கிவைத்த அவர் கூட்டுறவு துறை சார்பில் பயனாளிகளுக்கு ரூ.4.28 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகையில்

பெண்களுக்கான ஆட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன் முதலில் முதமைச்சரின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த ஆட்சி ஏழை எளிய மக்கள் உணர்ந்த ஆட்சி. ஆதிதிராவிட மக்கள் குடியிருக்கும் குடிசை வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படுகிறது. மேலும் சாலை வசதி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. பெண்கள் மதிக்கின்ற நாடுகளில் இந்தியா ஒன்று. அதில் முக்கியமான இடம் வகிக்கிறது தமிழகம். பெண்களுக்கு விடியல் பயணம் கல்லூரியில் பயில பெண்களுக்கும் ரூ.1000 ஆண்களுக்கும் ரூ.1000 இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிவருகிறார். இதுபோல எண்ணற்ற திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் ஏழை எளியோர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

இந்த விழாவில் கூட்டுறவு சங்களின் இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் பிரகாஷ், வட்ட வழங்கல் அலுவலர் துரைராஜ், ஒன்றிய அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் வசந்தா பழனி, ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் இசுக்கழிகாட்டேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வெங்கடாஜலம் நன்றி கூறினார்.

இதனைத் தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம் அணுக்குமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாப்பன்கொட்டாய், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் சீலப்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் ஆர்ப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட நெய்குணி, கமலப்புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட காளிங்காபூர் ஆகிய இடங்களிலும் பகுதிநேர நியாய விலை கடைகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்துவைத்தார்.

Similar News