அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலையில் 592 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை துணை சபாநாயகர் வழங்கினார்.;

Update: 2022-09-12 00:32 GMT

வேட்டவலம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜந்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் நல திட்டங்களை துணை சபாநாயகர் பிச்சாண்டி துவக்கி வைத்தார். வேட்டவலம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜந்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் வெங்கடாசலம், அனுராதா, பாரதி, ஆகியோர் தலைமை தாங்கினார். வேட்டவலம் பேரூராட்சி மன்ற தலைவர் கவுரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ராஜந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் மலர் எழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு 592 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் வட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 28 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். முடிவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் செந்தில் நன்றி கூறினார்.

பின்னர் தமிழ்நாடு மின்சாரத்துறை திருவண்ணாமலை கிழக்கு கோட்டத்தின் சார்பில் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவூர் பிரிவு, ஓலைப்படி மின்பகிர்மான மின்மாற்றி எண்.13, 63KVA/22KV ல் தொழில் மின் இணைப்பு, கோணலூர் பிரிவு நா.கெங்கப்பட்டு மின்பகிர்மான மின்மாற்றி எண்.10, 63KVA/22KV ல் விவசாய மின் இணைப்பு  மற்றும் மேற்கு கோட்டம் /கிராமம் கிழக்கு பிரிவில்,சீரியண்டல் மின்மாற்றி SS 14 தொழில் மின் இணைப்பு, தொடர் மும்முனை மின் இணைப்பு ஆகிய மூன்று மின்மாற்றிகளை துவக்கி வைத்தார்

தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் மங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

Tags:    

Similar News