வேட்டவலத்தில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தில் வங்கி ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.;
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி கிளையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, கொரோனா பரிசோதனை நடத்தியதில், 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தூய்மை பணியாளர்களை கொண்டு வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து வங்கிக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.