கூட்டுறவு நியாயவிலைக்கடை புதிய கட்டிடம்: துணை சபாநாயகர் திறந்து வைப்பு
கூட்டுறவு நியாயவிலைக் கடை புதிய கட்டிடத்தை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.
கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் மங்கலம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை எண்-2 மக்களின் பயன்பாட்டிற்காக தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், நுகர்பொருள் பண்டகசாலை இயக்குனர், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.