திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் தேர் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, கீழ்பெண்ணாத்தூர் , சேத்துப்பட்டு பகுதிகளில் தேர் திருவிழா நடைபெற்றது;

Update: 2023-02-25 02:27 GMT

கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற தேர்த் திருவிழா.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா், செய்யாறு. சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள நாச்சாபுரம் பகுதிகளில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில்களில் மாசிப் பெருவிழா தேரோட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

செய்யாற்றில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் புதியதாக வடிவமைக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

செய்யாவிட்டால் சந்தை மேடு திடலில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று ஏழாம் நாள் தேர் திருவிழா நடைபெற்றது.

காலையில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை வழிபாடு நடைபெற்றது. பின்னர் கரகாட்ட குழுவினரால் கரகாட்டம், பறை இசை, பம்பை, சிலம்பாட்டம் உள்ளிட்டவை நடந்தேறியது.

பின்னர் நண்பகல் கோயில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் இரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இதற்காக கோயில் நிா்வாகம் சாா்பில், சுமாா் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தேர் வடிவமைக்கப்பட்டிருந்தது.

முக்கிய வீதிகள் வழியாக சென்று குலத்தெரு சந்திப்பில் அடைந்தது பின்னர் மீண்டும் கோயில் அருகே நிலைக்கு வந்தடைந்தது.

கீழ்பென்னாத்தூா்

கீழ்பென்னாத்தூா் ஆஞ்சநேயா் கோயில் குளக்கரையில் அமைந்துள்ள பழைமையான அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் 70-ஆம் ஆண்டு மாசித் தேரோட்ட விழா கடந்த 18-ஆம் தேதி ஸ்ரீவிநாயகா் பூஜையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, உற்சவா் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, மகா தீபாராதனை நடைபெற்றன.

கோயிலில் உள்ள புற்று உருவிலான அம்மனுக்கு மலா் மாலைகள், எலுமிச்சை மாலைகள் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பிற்பகல் 2.45 மணிக்கு 32 அடி உயர தேரில் உற்சவா் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிறகு, பம்பை, உடுக்கை, கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நகரின் முக்கிய வீதிகளில் தோ வீதியுலா வந்தது. இரவு 7 மணிக்கு தோ மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு நாச்சியாபுரத்தில் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்து அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள நாச்சாபுரம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்தம்மன், 62-வது ஆண்டு மாசி மாத திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அன்று கொடியேற்றப்பட்டது. 

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மரத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்தம்மன் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். பின்னர் மீண்டும் கோவிலை தேர் சென்றடைந்தது. இரவு பேண்ட் வாத்தியம், நாதஸ்வரம், பம்பை உடுக்கையுடன் இசை நிகழ்ச்சியும் நாடகமும் நடந்தது.

 பல்வேறு கிராமத்திளை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு முன்பு பொங்கல் வைத்து படைத்து மா விளக்கு ஏற்றி வணங்கினர். ஏற்பாடுகளை நாச்சியாபுரம் கிராம பொதுமக்கள், தர்மகர்த்தாக்கள் செய்து இருந்தனர்.

தேர் திருவிழாவுக்காக காவல், தீயணைப்பு, மின்சாரத் துறை அலுவலா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும், பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டனா்.

Tags:    

Similar News