திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ரத்த தான முகாம்

திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த இரத்ததான முகாம் கலெக்டர் துவக்கி வைத்தார்

Update: 2022-10-09 02:25 GMT

திருவண்ணாமலையில் நடந்த ரத்ததான முகாமை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாக்கள் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.அதில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக ரத்த தான முகாம் திருவண்ணாமலை வேங்கி காலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் பாரி முன்னிலை வகித்து முகாம் தொடக்க உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் பிரபு வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கலந்து கொண்டு ரத்ததானம் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.தொடர்ந்து அவர் முகாமில் ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினார்கள்.இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அனைத்து அரசு அலுவலர்கள் சத்துணவு ஊழியர்கள் வருவாய் துறை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மற்றொரு அரசு விழாவான கீழ்பெண்ணாத்தூரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழ்பெண்ணாத்தூர் நகரை சுத்தமாக வைத்திருக்கவும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே தவிர்க்கவும் இது குறித்து பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் சாலையோரம் கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் பணியை பேரூராட்சி தலைவர் சரவணன் தொடங்கி வைத்தார்.

வீடுகள் கடைகளில் துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஆங்காங்கே ஒட்டும் பணியும் நடைபெற்றது. மேலும் மழைக் காலத்தை கருத்தில் கொண்டு வீட்டைச் சுற்றிலும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் தனமல்லி பேரூராட்சி கவுன்சிலர்கள் பணியாளர்கள் உட்பட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஒன்றிய குழு துணை தலைவர் முருகையன் அனைவரையும் வரவேற்றார்.இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

வரவு செலவு திட்டங்கள் வாசிக்கப்பட்டது.சேத்துப்பட்டு மருத்துவமனையை தரம் உயர்த்துதல், அரசு பள்ளிகளில்  புதிய வகுப்பறைகள் கட்டுதல் , விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதால் அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மழைக்காலத்திற்கு  முன்பு சாலைகளை சீர் செய்தல்உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சேத்துப்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி ,  ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் நாகராஜன் ,  மற்றும் ஒன்றிய பொறியாளர்கள்  , உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News