போதைப் பொருள் பயன்பாடு தடுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Awareness Program - வேட்டவலம் பேரூராட்சியில் போதை பொருள் பயன்பாடு தடுத்தல் குறித்து பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
Awareness Program -திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேட்டவலம் லயன் சங்கம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு தடுத்தல் குறித்து பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி கொடியை வைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
பேரணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் அருண் லால் ,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், லயன் சங்க மாவட்ட ஆளுநர் ராஜேந்திரன், மாவட்ட லயன் சங்க தலைவர் இளங்கோவன், மாவட்ட ரெட் கிராஸ் தலைவர் இந்திரராஜன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ,அரசு அலுவலர்கள் ,லயன் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் பேரணியில் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் புனித அலோசியஸ் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு தடுத்தல் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது . இதில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பின்னர் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சோமாசிபாடிபுதூரில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்றார்.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோமாசிபாடிபுதூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடந்தது. திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். தாசில்தார் சக்கரை, சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் பன்னீர்செல்வம், மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம், ஒன்றியஆணையாளர் அருணாச்சலம், உதவி ஆணையர் (கலால்) குமரன், ஊராட்சிமன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ரெட்கிராஸ் சங்க தலைவர் இந்திரராஜன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு மற்றும் ஊர்வலத்தை தொடங்கி வைத்து, ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அப்போது போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடியும் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மண்டல துணைதாசில்தார் வேணுகோபால், அட்மா ஆலோசனைக்குழு தலைவர் சிவக்குமார், மாவட்ட ரெட்கிராஸ் சங்க பொருளாளர் சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அரிபாலன், வருவாய் ஆய்வாளர் மகாலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சாவித்திரி மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2