12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கீழ்பென்னாத்தூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரிய, ஆசிரியைகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில், கீழ்பென்னாத்தூா் வட்டாரக் கல்வி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டு நடவடிக்கைக் குழுவின் வட்டாரத் தலைவா்கள் தமிழ்ச்செல்வன், திலகம், தேவேந்திரன், முருகன், முருகேசன் ஆகியோா் கூட்டுத் தலைமை வகித்தனா்.
வட்டாரச் செயலா்கள் அய்யாசாமி, குமாா், சுகுமாா், அந்தோணி குரூஸ், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில நிா்வாகிகள் வேலு, முருகன், ஜேம்ஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்கக் கல்வி ஆசிரியா்களை பாதிக்கும் மாநில முன்னுரிமையை ரத்து செய்து மீண்டும் ஒன்றிய முன்னுரிமையைக் கொண்டு வர வேண்டும். முடக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகையை மீண்டும் அளிக்க வேண்டும்.
உயா்கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் மற்றும் பின்னேற்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில், 100-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அரசானை 243ஐ திரும்ப பெறு வலியுறுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரணி ஒன்றிய செயலாளர் அருண் பிரசாத் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் திருமால் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் பள்ளி தலைமை ஆசிரியர் புருஷோத் மற்றும் கண்ணதாசன் சரவணன் சண்முகம் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.