அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கால்நடை மருத்துவ முகாம்

காட்டுமலையனூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

Update: 2022-05-12 07:14 GMT

முகாமில்  விவசாய கடன் அட்டை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன 

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த காட்டுமலையனூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நாடழகானந்தல் கால்நடை மருந்தகம் சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாயகி அருணாசலம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராணி ராஜாராம் முன்னிலை வகித்தார். துணை வேளாண் அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார்.

முகாமில் கால்நடை மருத்துவர் ராஜ்குமார் தலைமையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுப்பிரமணி, கருவூட்டல் பயிற்சியாளர் சங்கர் ஆகியோர் பங்கேற்று 350 கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி, குடற்புழு நீக்க சிகிச்சை மற்றும் தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டத்தில் 5 பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் பணியை மேற்கொண்டனர்.

மேலும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான விவசாய கடன் அட்டை பெற பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று, பலருக்கு விவசாய கடன் அட்டை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், உதவி வேளாண்மை அலுவலர் வேடியப்பன் மற்றும் பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தோட்டக்கலை அலுவலர் துளசி நன்றி கூறினார்.

Tags:    

Similar News