வரும் 2026 சட்டமன்ற தேர்தல் நமக்கான தேர்தல்; அதிமுக அமைப்புச் செயலாளர் பேச்சு

அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நமக்கான தேர்தல் என அமைப்புச் செயலாளர் மோகன் பேசினார்.

Update: 2024-10-05 03:04 GMT

அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன்

அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் அதிமுக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கீழ்பெண்ணாத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தொப்பலான் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் கண்ணன், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார், அரங்கநாதன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆன ராமச்சந்திரன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பேசினார்.

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளர் மோகன் பேசுகையில்,

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் நமக்கான தேர்தல் எனவே கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் முனைப்புடன் தேர்தல் களப்பணியில் ஈடுபட வேண்டும் அனைவரும் ஒற்றுமையுடன் கட்சி பணியாற்றி விட வேண்டும்.

தமிழகத்தில் 53 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் அதிமுக தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று உள்ளது. ஏழை எளிய மக்களின் நலனுக்காக புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி  , எடப்பாடியார் ஆகியோர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று உள்ளது. 

ஏழைகளுக்கு குடிசை வீடுகளை மாற்றி கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்ததும்,  குடிசை வீடுகளுக்கு மின்விளக்கு வசதி செய்து கொடுத்ததும், பெண்களுக்கு முன்னுரிமை அளித்து பெண்களுக்கு என காவல் நிலையத்தை கொண்டு வந்ததும் ,பெண்களுக்கு கட்சியின் 33 சதவிகித இட ஒதுக்கீடு அளித்ததும் நமது அதிமுக ஆட்சியில் தான்.

எம்ஜிஆர், ஜெயலலிதா  தலைமுறைக்கு அடுத்தபடியாக மூன்றாவது தலைமுறையாக எடப்பாடி யார் திகழ்கிறார்.  வருகிற உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தலில் நம் முன் நிற்பது இரட்டை இலை மட்டுமே . எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியாரை முதலமைச்சராக  கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ,கிராமங்கள் தோறும் சென்று அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி தேர்தல் களப்பணியில் ஈடுபட வேண்டும் என பேசினார்.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை நகர செயலாளர் செல்வம், ஒன்றிய அவை தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,  உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News