செய்யாறு அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
செய்யாறு அருகே தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது.;
செய்யாறு அருகே தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், முக்கூா் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி முனியாண்டி.இவரது இரண்டாவது குழந்தை மகேஸ்வரன் , வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்தது.
குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் சென்று குழந்தையை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சங்கா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்
தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி.
இவா் உத்திரமேரூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
இந்த நிலையில், இரவு வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் நாராயணசாமி ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
வந்தவாசி-உத்திரமேரூா் சாலையில், வழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கும் சிகிச்சை பலன் இன்றி நாராயணசாமி இன்று காலை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.