100 நாள் வேலை வழங்க வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கலசபாக்கத்தில் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-05-31 02:42 GMT

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள்

கலசப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நிறுத்திவைக்கபட்டுள்ள ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியை அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக தொடங்க வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலை வழங்க வேண்டி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தாலுக்கா செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், மாவட்ட துணை தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,

தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை முழுமையாக வழங்க வேண்டும் 100 நாள் வேலைக்கு மத்திய அரசாங்கத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும் 100 நாள் வேலையில் ரூபாய் 319 வழங்க வேண்டிய ஊதியத்தை 100 வழங்கிய மத்திய அரசை கண்டிக்கிறோம்.

ஒரு நாள் பணி செய்யும் ஒவ்வொரு பணியாளருக்கும் ரூபாய் 319 வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக வழங்க வேண்டும், அதன் ஊதியம் ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

100 நாள் வேலையை குறைக்காமல் முழு வேலையாக வழங்க வேண்டும், விடுமுறை அளிக்காமல் வழங்க வேண்டும், முழுமையாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து மத்திய அரசு கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் 100 நாள் அட்டையுடன் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News