கலசபாக்கத்தில் தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கலசபாக்கத்தில் தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-05-21 11:28 GMT

தரையில் நெல்லை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கலசபாக்கம் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல் மூட்டைகளை கொண்டு வந்து தரையில் நெல்லை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலசபாக்கம் பகுதியில் தற்போது நெல் அறுவடை செய்யப்பட்டு வருவதற்கு கொள்முதல் செய்ய போதுமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது எலத்தூர், கேட்டவரம்பாளையம் ஆகிய 2 கொள்முதல் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் கூடுதலாக ஆங்காங்கே கொள்முதல் நிலையங்களை திறக்கப்பட்டு விவசாயிகளுக்கு உதவி செய்திட வேண்டும் என்ற கோரிக்கையில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் பொருட்கள் முறையாக வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே ரேஷன் பொருட்கள் முறையாக வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அருகில் உள்ள ராந்தம் கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 350 ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் வழங்கி பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்காமல் ஒரு மாதத்துக்கு முன்பு பில் போட்டவர்களுக்கு மட்டுமே இம்மாதம் பொருட்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

350 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள கடைகளுக்கு 250 ரேஷன் அட்டைதாரருக்கு மட்டுமே அரிசி வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்க வலியுறுத்தி ராந்தம் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள பாலானந்தல் கூட்ரோடு அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மங்கலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News