நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

எலத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-08-28 17:00 GMT

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் எலத்தூர் கிராமத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் கோபிநாத், உதவி ஆட்சியர் கட்டா ரவி தேஜா, வருவாய் கோட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News