ஜவ்வாது மலை உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் ஆய்வு
ஜவ்வாது மலை பழங்குடியினர் பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கோண்டார்.;
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூர் வட்டம் ஜவ்வாது மலை அரசவல்லி கிராமம் அரசு பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
மலைவாழ் மக்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டம் அரசவல்லி கிராமம் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள மாணவர்களின் வகுப்பறைகளையும் மற்றும் ஆறு முதல் பத்து வகுப்பு வரை உள்ள மாணவர்களின் வகுப்பறைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் அருகில் உள்ள வனத்துறை பள்ளி கட்டுப்பாட்டில் உள்ள வகுப்பறைகளை வழங்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் பள்ளியின் அடிப்படையில் வசதிகள் மாணவர்களின் வருகை விவரம் மற்றும் மாநகர மாணவிகளின் கற்றல் திறனை நேரில் கண்டறிந்து மாணவர்களை தனித்தனியாக அழைத்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தும், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து மாணவ மாணவிகளுடன் ஒன்றாக அமர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உணவு அருந்தினார்.
மேலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து வனத்துறை மேல்நிலைப் பள்ளியில் தற்போதைய நிலை குறித்தும் பயன்படுத்துவதற்கு உள்ள சாதிய கூறுகள் குறித்தும், கட்டிடத்தின் தன்மை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியின் கூடுதல் கட்டிடம் கட்டும் வரை மாணவர்கள் தங்கி படிப்பதற்கு ஏதுவாக காலியாக உள்ள பள்ளியின் வகுப்பறைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் வட்டாட்சியர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்வித்துறை, அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.