கஞ்சா செடி பயிர்; ஜவ்வாதுமலையில் பெண் கைது
ஜவ்வாதுமலையில் 3 கிலோ 700 கிராம் கஞ்சாவை வீட்டிலும், நிலத்தில் 45 கஞ்சா செடியையும் பதுக்கிவைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் பாஞ்சாலை.
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் அருகே நம்மியம்பட்டு கிராமத்தில் கஞ்சா வளர்ப்பதாக எஸ்.பி., பவன் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, போளூர் உட்கோட்ட டிஎஸ்பி அறிவழகன் மேற்ப்பார்வையில், கலசபாக்கம் தனிப்படை காவலர்கள் ஜமுனாமரத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம்மியம்பட்டு கிராமத்தில் சோதனை நடத்தினர். இதில், பாஞ்சாலை வயது40, என்பவர் தனது வீட்டில் 3 கிலோ 700 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தார்.
அதனை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து அவரது நிலத்திலும் சோதனை நடத்தினர். அங்கு 45 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தயும் பறிமுதல் செய்தனர். பின்னர், பாஞ்சாலை மீது ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.