பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 4 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 4 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-09 15:43 GMT

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தச்சம்பாடி கிராமத்தை சேர்ந்த துரைப்பாண்டி, என்பவர் 3 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் S.பிரபாவதி  (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஆரணி வட்டம், வடுகசாத்து கிராமத்தை சேர்ந்த அருண்குமார்,  என்பவர் ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, ஆரணி கிராமிய காவல் ஆய்வாளர்  P.புகழ் அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் கார்கோணம் கிராமம், பெரிய தெருவை சேர்ந்த பச்சையப்பன்,  என்பவர் கள்ளச்சாராய விற்பனiயில் ஈடுபட்ட குற்றத்திற்காக, கலசப்பாக்கம் காவல் ஆய்வாளர் G.ஜனார்த்தனன் அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் திருவண்ணாமலை நகரம், மாந்தோப்பு, ராமகிருஷ்ணா ஓட்டல் எதிரில் வசித்து வரும் அப்பு @ மணிகண்டன் வ/27, த/பெ உதயகுமார் என்பவர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, ஆரணி நகர காவல் ஆய்வாளர் P.கோகுல்ராஜன் அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார்,  அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், அவர்கள், மேற்கண்ட 4 நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News