கலசப்பாக்கத்தில் அதிமுக வாக்கு சேகரிப்பு
அதிமுக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தற்போதைய கலசபாக்கம் அதிமுக வேட்பாளருமான பன்னீர்செல்வம் அலங்காரமங்கலம் ஊராட்சியில் உள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் விண்ணுவாம்பட்டு ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அதிமுக, பாஜக மற்றும் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் கலசப்பாக்கம் பொதுமக்களிடம் உரையாற்றும் போது மீண்டும் கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த முதல்வர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம் இதனை எதிர்க்கட்சியினர் இந்த தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தியதால் தான் அதிமுக வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். ஆனால் உண்மை அது அல்ல இந்த தேர்தலில் தான் உதயசூரியனுக்கு இரட்டை இலைக்கும் இந்த தொகுதியில் நேரடி போட்டி ஏற்பட்டு இருப்பதாகவும் உதய சூரியனை காட்டிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.