வயிற்றுவலியால் வாலிபர் தற்கொலை

வயிற்றுவலியால் 23 வயது வாலிபர் தூக்கிட்டு தற்கொலை;

Update: 2021-04-19 05:15 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மேல்முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன். இவர் மனைவி இரண்டு மகன்கள் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

வெங்கட்ராமனின் இரண்டாவது மகன் குமார் (23) விவசாயம் செய்து வருகிறார். குமாருக்கு கடந்த சில மாதங்களாக தாங்கமுடியாத வயிறு வலி இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் வயிறு வலி தாங்க முடியாமல் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவர்கள் குமாரை மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தானிப்பாடி போலீசார் குமாரின் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News