திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் மா்ம உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
Today's Death News in Tamilnadu -திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.;
உயிரிழந்த புஷ்பா.
Today's Death News in Tamilnadu - திருவண்ணாமலை மாவட்டம், சு.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சோந்தவா் ஆறுமுகம் மகள் புஷ்பா. செங்கம் வட்டம், பெரிய கல்தாம்பாடி கிராமத்தைச் சோந்தவா் அண்ணாதுரை மகன் விவேகானந்தன்.
இவா்களுக்கு 2022 ஏப்ரல் 6-ஆம் தேதி திருவண்ணாமலை கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணமான 2 மாதம் நிறைவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் புஷ்பா மா்மமான முறையில் உயிரிழந்தார்
இந்த நிலையில் புஷ்பா கர்ப்பிணியாக இருந்ததாகவும், இதற்கிடையில் புஷ்பாவை அவரது கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. தாய் வீட்டிற்கு வந்த புஷ்பாவை அவரது பெற்றோர் கடந்த 4-ந்தேதி புஷ்பாவின் கணவர் வீட்டில் விட்டு வந்து உள்ளனர். மறுநாள் புஷ்பா தூக்குப்போட்டு இறந்து விட்டார் என்று ஆறுமுகத்திற்கு அவரது உறவினர்கள் மூலம் தகவல் கிடைத்து உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையில் புஷ்பாவின் கணவர் விவேகானந்தன் மற்றும் அவரது பெற்றோர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் புஷ்பா உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பிற்பகல் 4 மணி அளவில் புஷ்பாவின் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென திருவண்ணாமலை அரசு மருத்துவமனை எதிரில் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், புஷ்பாவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவரை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து அடித்து கொன்று விட்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை புஷ்பாவின் உடலை வாங்க மட்டோம் என்றனர்.
இதனைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து வந்தனர். பின்னர் அவர்கள் புஷ்பாவின் உடலை வாங்கி சென்றனர்.. மேலும் இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இறந்த புஷ்பாவின் தங்கை ஆறுமுகம் கூறும்போது, வரதட்சிணை கொடுமை செய்து எனது மகளை விவேகானந்தன் குடும்பத்தினா் அடித்துக் கொன்றுவிட்டனா் . என் மகளின் சாவிற்கு காரணமானவர்களை உரிய விசாரணை செய்து கைது செய்ய வேண்டும் என அவர் காவல்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2