செங்கத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.;

Update: 2021-04-14 13:45 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் முழு திருவுருவ சிலைக்கு அவரின் 130வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.சிவராமன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் எம்.நாராயணகுமார், மாநில தலைமை நிலைய செயலாளர் தலைமை ஆசிரியர் ஆர்.சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News