குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
செங்கம் குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலை அடிவாரத்தில் குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த குப்பநத்தம் அணையின் மொத்த கொள்ளளவு 59 கன அடி ஆகும் மேலும் இந்த ஆண்டு பருவமழை மிகக் குறைவாக பெய்தபோது சேமித்த மழை நீர் சுமார் 47 கன அடியாக உள்ளது.
மழைக்காலங்களில் குப்பநத்தம் அணைக்கு வந்த மழை நீர் செங்கம் நீர்வள ஆதாரத்துறை 47 கன அடியாக சேமித்த மழை நீர் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று பாசனத்திற்காக மார்ச் இரண்டாம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 25 தினங்களுக்கு மட்டும் திறக்கப்படும். குப்பநத்தம் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் செங்கம் அருகே உள்ள 47 ஏரிகள் உள்பட குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு சென்றடையும்.9 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலம் இதனால் பயனடையும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குப்பநத்தம் அணையில் இருந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்காக நீர் திறப்பு விழா நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அணையில் சிறப்பு பூஜை செய்து பாசனத்திற்காக மூன்றாவது கண்ணாரில் நீர் திறந்து வைத்து அப்போது வெளியேறிய பாசன நீரில் மலர் மற்றும் நவதானியங்களை தூவி மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தடகள சங்கத் துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாவட்ட செயற்பொறியாளர் அறிவழகன் ,உதவி செயற்பொறியாளர் சிவகுமார், வட்டாட்சியர் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ரேணுகா, துணை வட்டாட்சியர் தமிழரசி, மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் நெடுஞ்செழியன், உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலர்கள், பாசன விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.