வயல்வெளிகளில் கலை எடுக்கும் விவசாய பெண்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு

வயல்வெளிகளில் கலை எடுக்கும் விவசாய பெண்களிடம் வாக்களிக்க ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2024-04-12 00:57 GMT

வயல்வெளிகளில் களை எடுக்கும் விவசாய பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் விடுபடாமல் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் தேர்தல் அன்று தவறாமல் வாக்களிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், வாக்காளர் வாக்காளர் உறுதிமொழி ஏற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

வயல்வெளிகளில்

இதன் ஒரு பகுதியாக செங்கம் அடுத்த வளையம்பட்டு கிராமத்தில் வயல்வெளிகளில் கலை எடுக்கும் விவசாய பெண்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் வளையம்பட்டு கிராமத்தில் வயல்வெளிகளில் கலை எடுக்கும் விவசாய பெண்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் வாத்தியங்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் சீர்வரிசை அழைப்பிதழுடன் சென்று விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் வாக்காளர் கையேட்டினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

தொடர்ந்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மகளிரிடையே அமர்ந்து வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து தேர்தல் அன்று தவறாமல் வாக்களிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, தனித்துணை ஆட்சியர் தீப சித்ரா, வட்டாட்சியர்கள் தியாகராஜன், முருகன் ,தனி வட்டாட்சியர் ரேணுகா, அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News