செங்கம் அருகே கிராம சபை கூட்டம் எம்எல்ஏ பங்கேற்பு!
செங்கம் அருகே சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் எம்எல்ஏ பங்கேற்றார்;
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொதுமக்கள் ஏரி கால்வாய் தூர்வார வேண்டும் , ஏரி ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்றம் செய்ய வேண்டும், மேல்பென்னாத்தூ ர் ஊராட்சி முழுவதும் உள்ள சிதலமடைந்துள்ள கால்வாய்கள் முழுவதும் புனரமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்டா கோரிக்கைகள் பொதுமக்கள் முன் வைத்தனர்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கிரி பேசியதாவது, மக்களுக்கான ஆட்சி தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுவதும் தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், கட்டணமில்லா பேருந்து வசதி போன்ற எண்ணற்ற திட்டங்கள் மூலம் அடித்தட்டு மக்கள் பெருமளவில் பயன்பெற்று வருகின்றனர். கலைஞர் கனவு இல்ல மூலம், வீடுகள் இல்லா்தவர்கள் மற்றும் ஓட்டு வீடு, குடிசை வீடு ஓலை வீடு போன்றவற்றில் குடியிருக்கும் பொது மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கட்டாயம் அனைவருக்கும் வீடு அமைத்தரப்படும். குடியிருக்கும் வீடு பழுது பார்த்தல் போன்ற பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்பொழுது அதற்கான கணக்கெடுப்பும் நடைபெற்று வருகின்றன. மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி முழுவதும் 80% பணிகள் முழுமை பெற்று உள்ளது. ஒரு சில பணிகள் தொடர்ந்து நடைபெறும் என கிரி எம் எல் ஏ பேசினார்
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், ஏழுமலை, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் ஊராட்சி செயலாளர் ஏழுமலை, ஊர் பொதுமக்கள், ஆசிரியர்கள், அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கம் தொகுதி செங்கம் ஒன்றியம் மேல் பெண்ணாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.