செங்கம் தொகுதியில் கால்நடை சுகாதார சிறப்பு விழிப்புணர்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.;

Update: 2021-12-21 13:55 GMT

செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி ஆகிய நிகழ்ச்சிகள் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி   தலைமையில் இன்று நடைபெற்றது.

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அவர்கள் துவக்கி வைத்தார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மேல் ராவந்த் வாடி ஊராட்சியில் துவக்கி வைத்தார்.

செங்கம் பேரூராட்சியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயணம் நிகழ்ச்சியை செங்கம் பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சிகளில் பேரூராட்சி அலுவலர்கள் ,ஊராட்சி மன்ற தலைவர்கள், களப்பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள், வட்ட கல்வி அலுவலர்கள், சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News