திருவண்ணாமலை மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசி விழா
திருவண்ணாமலை வட்டத்தில் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது.;
திருவண்ணாமலை வட்டத்தில் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது.
செங்கம்:
செங்கம் அருள்மிகு ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்த பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது .
இதனை தொடர்ந்து ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார். இதில் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் திருக்கோவில் உட்பிரகாரத்தில் மேலதாளங்களுடன் வலம் வந்தார் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு புனித நீர், குங்குமம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட வீதியில் குபேர மூலையில் அமைந்துள்ள ஸ்ரீ பூத நாராயணர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது.
பின்னர் கருட வாகனத்தில் பூத நாராயண பெருமாள் எழுந்தருளி மாடவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும் விளங்கக் கூடியது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில். இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின் கோயிலில் உள்ள வேணுகோபால் சமேத பாமா ருக்குமணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, கோயிலில் சரியாக அதிகாலை 5.18 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனை காண கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கங்கள் எழுப்பி சாமி வழிபாடு செய்தனர். சிவன் கோயில்களில் வேணுகோபால் சுவாமி இருப்பது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
போளூர்:
சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஸ்ரீ வரத சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் வைகுந்த ஏகாதேசி விழாவில் ஸ்ரீ வரத சஞ்சீவிராய பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி வரத ஆஞ்சநேயர் உடன் சொர்க்கவாசலில் அருள் பாலித்து கோபுர வாசலில் பக்தர்களுக்கு கோபுர தரிசனம் வழங்கினார் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.