வேளாண் துறை சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி

செய்யாறு மற்றும் புதுப்பாளையம் வேளாண் துறை சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது;

Update: 2023-02-23 07:05 GMT

அட்மா திட்டத்தின் கீழ்   விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

செய்யாறு மற்றும் புதுப்பாளையம் வேளாண் துறை சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் மூலம் மணிலா மற்றும் எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி வகுப்புகள் குறித்து வடமாத்தூர் கிராமத்தில் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி பண்ணை பள்ளி வகுப்புகள் நடத்தப்பட்டது.

இவ்வகுப்பில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோகிலா  கலந்துகொணண்டு விவசாயிகள் மற்றும் அலுவலர்களை வரவேற்று வேளாண்மை தொழில்நுட்ப முகமை திட்ட செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறினார்.

வேளாண்மை துணை இயக்குனர் கண்ணகி  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மணிலா மற்றும் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையின் பருவ காலங்கள் ரகங்கள் அவற்றை தேர்வு செய்தல் பற்றி விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.

மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பண்ணை கருவிகள் தார்ப்பாய்கள் மற்றும் தெளிப்பான்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது என விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

மேலும் சிறுதானியங்கள் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தொழில் நுட்ப மேலாளர்  உழவன் செயலி பதிவிறக்கம் செய்து காண்பித்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடாஜலம் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

செய்யாறு வட்டார வேளாண் துறை சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

வடபூண்டிப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சண்முகம், திருவண்ணாமலை விதைச் சான்று உதவி இயக்குநா் குணசேகரன், விதைச் சான்று அலுவலா் சுந்தரமூா்த்தி ஆகியோா் பேசினா்.

பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை உதவி விதை அலுவலா் ரமேஷ், வேளாண்மை உதவி அலுவலா் பழனி, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஜெயராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

Tags:    

Similar News