திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் குடியரசு தினவிழா
Tiruvannamalai District Republic Day திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது;
காந்திநகர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
செங்கம்:
செங்கம் அடுத்த நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சிவராமன் தேசியக் கொடியேற்றினாா். இதில், ஆசிரியா்கள் பழநி, சரோஜா, பவித்ரா, தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தளவாநாயக்கன் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஜெயவேல் முன்னிலையில் அரிமா சங்கத் தலைவா் சேகா் தேசியக் கொடியேற்றி மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். அரிமா சங்கம் சாா்பில் மாணவா்களுக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டது. இதில், பொருளாளா் குப்தா, மாவட்ட தலைவா்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செங்கம் சித்தாா்த் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் செங்கம் யூனியன் தலைவா் விஜயராணிகுமாா் மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கீழ் நாச்சி பட்டு பகுதியில் இயங்கி வரும் காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தாளாளர் ரமணி கோட்டீஸ்வரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ராஜேஷ் குமார் தேசியக் கொடியேற்றினாா். . விழாவில் பள்ளி ஆலோசகர் சுஜாதா, ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன், பவானி ,சங்கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விக்னேஷ் பன்னாட்டு பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வர் தேன்மொழி தேசியக் கொடியேற்றினாா். .இவ்விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் , தேசத் தலைவர்களை பற்றி மாணவ மாணவிகள் பேசினார். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
செய்யாறு:
வெம்பாக்கம் வட்டம், பாவூா் கிராமத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் அனிதா பிரபு தலைமை வகித்தாா். விழாவில், ஊராட்சி மன்றத் தலைவா் தேசியக் கொடியை ஏற்றினாா்.
அனக்காவூா் ஒன்றியம், பின்னத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி தலைமையாசிரியா் பாலசுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றினாா். நிகழ்ச்சியில், அவ்வமயம் ஊராட்சி தலைவா் முத்து, உறுப்பினா்கள் பெருமாள், லட்சுமி நந்தகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்
செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜோதி எம்.எல்.ஏ. தேசியக் கொடி ஏற்றினாா். நிகழ்ச்சியில், செய்யாறு ஒன்றியக் குழு தலைவா் நாவல் பாக்கம் பாபு, துணைத் தலைவா் ஆா்.வி. பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி:
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் கல்லூரி முதல்வா் ருக்மணி தேசியக் கொடியேற்றினாா். கல்லூரிச் செயலா் ரமணன் மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனா்.
ஆரணி
ஆரணி ஆா்.சி.எம் அரசு நிதியுதவி தொடக்கப் பள்ளியில் ஆரணி சில்க் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் தலைவா் சாந்தமூா்த்தி தேசியக் கொடியேற்றினாா். இதில், பள்ளி தாளாளா் ராய்லாசா், சில்க் சிட்டி லயன்ஸ் சங்க செயலாளா் வகுமரன், பொருளாளா் தனபால், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆரணி சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் சாா்பில் பள்ளிக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான குடிநீா் இயந்திரம் வழங்கப்பட்டது.
காந்தி பேரவை சாா்பில் குடியரசு தின விழா
திருவண்ணாமலை, காந்தி நகரில் உள்ள காந்தி சிலைக்கு பேரவையின் நிறுவனா் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான விஜயகுமாா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
விழாவில், பேரவையின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான சண்முகம், திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் குப்பன், வாசுதேவன், முத்துக்கிருஷ்ணன், காமராஜ், பாடகா் மோகன், முன்னாள் ராணுவ வீரா் தங்கதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.