திருவண்ணாமலை: பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

வீரணம் ஊராட்சியில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

Update: 2022-05-06 01:29 GMT

பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது.

தண்டராம்பட்டு அடுத்த வீரணம் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தை சிலர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர், கழிவறை கட்டி உள்ளனர்.

இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தாசில்தார் பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் சர்வேயர்கள் தரணி வாசன், தமிழரசன், சாத்தனூர் அணை சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி ஆகியோர் அளவீடு செய்து பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது துணை தாசில்தார்கள் செந்தில்குமார், கலைச்செல்வி, வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கீதா, சிவலிங்கம், முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News