வேன் விபத்தில் 12 பேர் காயம் உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்
வேன் விபத்தில் 12 பேர் காயம் அடைந்தது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.;
திருவண்ணாலை மாவட்டத்தில் நடைபெற்ற குற்றசம்பவங்கள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சாலவேடு அருகே மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயிலுக்கு பக்தர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானது.
செங்கம் வட்டம் செ.அகரம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், மேல்மருவத்தூர் கோயிலுக்கு இன்று காலை வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலவேடு கிராமம் அருகே சென்ற வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி விபத்துள்ளானது.இதில் 12 பேர் காயம் அடைந்தனர்.பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து கீழ்கொடுங்காலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுக்கடை சுவரில் துளையிட்டு திருடியவர்களை போலீசார் தேடி வருின்றனர்.
வந்தவாசியை அடுத்த மழையூரில் தேசூர் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு விற்பனை நேரம் முடிந்ததும் கடையை மேற்பார்வையாளர் கிருஷ்ணன் பூட்டி விட்டுச் சென்றுள்ளார். நள்ளிரவு இந்த கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மதுபாட்டில்களை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த சிலர் கூச்சலிடவே அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். வந்தவாசி துணை சூப்பிரண்டு கார்த்திக் தலைமையிலான வடவணக்கம்பாடி போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு போனதாக மதுக்கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.