செங்கம்; நியாய விலைக் கடைகளை திறந்து வைத்த அமைச்சர்
செங்கம் பகுதியில் நியாய விலைக் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்;
பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை துவக்கி வைத்த அமைச்சர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் தண்டராம்பட்டு, வானாபுரம், காம்பட்டு, பேராயம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் நியாய விலைக் கடை, அங்கன்வாடி கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் என மொத்தம் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தும் , 10 கோடி மதிப்பில் பல்வேறு நல திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியும் அமைச்சர் சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் வேலு பேசியதாவது;
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற காலத்தில் இருந்து தற்போது வரை தமிழகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் சகோதர சகோதரிகளாக பார்த்து திட்டங்களை தீட்டி வருகிறார்.
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், வீட்டில் உள்ள குடும்ப தலைவைகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், உயர்கல்வி படிக்கக்கூடிய பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம், 12-ம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பு படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் , அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவது போன்ற பல்வேறு நல திட்டங்களை பெண்களுக்காக செய்து வருகிறார்.
மகளிர் உரிமை திட்டத்தில் ஒரு சில பயனாளிகள் அந்த திட்டத்தில் பயன்பெற முடியாமல் இருப்பதாகவும், இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உண்மையான பயனாளிகளுக்கு மீண்டும் மகளிர் உரிமை திட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த வாரம் முதல் தமிழக முழுவதும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை தேர்வு செய்து மாதம் தோறும் மாவட்ட ஆட்சியர்கள் ஒரு தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை தேர்வு செய்து ஒரு நாள் முழுவதும் அங்கே தங்கி மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முன்பெல்லாம் நாம் அதிகாரிகளை தேடி சென்ற காலம் இருந்தது இப்போது திராவிட மாடல் ஆட்சியில் நம்மைத் தேடி மாவட்ட அதிகாரிகள் வரும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மக்களை தேடி மருத்துவம் ,மக்களை தேடி கல்வி, மக்களை தேடி பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி வருவதால் தற்போது மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்களை தேடி பல்வேறு திட்டங்களை செயல் படுத்திக் கொண்டிருக்கும் இந்த அரசுக்கு மகளிர் ஆகிய நீங்கள் என்றென்றும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
விழாவில், எம்எல்ஏக்கள் கிரி, சரவணன், மாநில தடகளச் சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன், மகளிா் திட்ட இயக்குநா் சரண்யா தேவி, தண்டராம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் பரிமளா கலையரசன், துணைத் தலைவா் பூங்கொடி உள்பட பல்வேறு துறைகளின் அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.