தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி பணியாளர்கள் நல சங்க கூட்டம்

செங்கம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அனைத்து பணியாளர்கள் நல சங்க கூட்டம் நடைபெற்றது

Update: 2024-01-02 13:57 GMT

தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில்  நடைபெற்ற  மாவட்ட பொது குழு கூட்டம் .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில் மாவட்ட பொது குழு கூட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டு 5 அம்ச கோரிக்கைகளை ஒரு மானதாக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு முன் வைத்து ஏற்புரை வழங்கி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார்.

தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அனைத்து பணியாளர்கள் நல சங்கத்தின் புதிய மாநில தலைவர் சிவராமன், மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் கணேசன், ஆகியோர்களை நிர்வாகிகளிடம் அறிமுகப்படுத்திய பின்னர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சட்ட மேதை அம்பேத்கார் திருவுருவ சிலைக்கு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாபு உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மாநில துணைத்தலைவர் நாராயணகுமார் நன்றி தெரிவித்தார். இறுதியில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகள் அனைவரும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றிகள் தெரிவித்தார்கள்.

வருவாய் கிராம ஊழியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

திருவண்ணாமலை தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில செயலாளர் பெருமாள், முன்னாள் மாநில தலைவர் அன்சர், மாநிலத் தலைவர் திருமலைவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

Tags:    

Similar News