ராகிங் செய்த செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இடை நீக்கம்

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராகிங் செய்த இரண்டு மாணவர்களை மே 4ஆம் தேதி வரை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவு;

Update: 2022-04-26 13:25 GMT

செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்க முயற்சி, வகுப்பறையில் பெண் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே நடனமாடும் மாணவர்கள், ஆமாம் நானும் ரவுடிதான் என்று ஆசிரியரையே மிரட்டும் தொனியில் பேசும் காட்சி, மேஜை நாற்காலிகளை உடைக்கும் அட்டகாச காட்சிகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சிலர் சக மாணவனை அடித்து துன்புறுத்தி நடனமாட செய்கின்றனர். மேலும் பாட்டு பாடிக்கொண்டு தங்களுக்கு விசிறி விட சொல்லியும் சக மாணவர்களை அடிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தது. மாணவர்களை அடித்து தொந்தரவு செய்யும் மாணவர்களால் மற்ற மாணவர்கள் அச்சம் அடைந்திருந்தனர்

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டபோது முறையாக எந்த பதிலும் கூறாமல் இன்னும் 5 நாட்களில் தேர்வு முடிந்து விட்டால் மாணவர்கள் சென்று விடுவார்கள் என்று அலட்சியமாக கூறினார்.

இதைப்பற்றிய முழு செய்தி நேற்று நமது இன்ஸ்டா நியூஸ் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை  ஆர்டிஓ வெற்றிவேல் ராகிங் செய்த செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்,  இதில் ராகிங் செய்த இரண்டு மாணவர்களை மே 4ஆம் தேதி வரை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News