செங்கம் கல்வி பள்ளி வட்டத்தில் மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம்.
செங்கம் கல்வி வட்டத்தில் பனைஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு அமைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இக்குழுவில் பெற்றோர்கள் 15 பேர் ஆசிரியர்கள் இரண்டு பேர் உள்ளாட்சி பிரதிநிதி உள்ளிட்ட 20 பேர் இடம்பெறுவர்.
இக்குழுவினர் பள்ளி மாணவர்களின் தேவைகள் அடிப்படை வசதிகள் மற்றும் இதர தேவைகள் குறித்து ஆலோசித்து நிவர்த்தி செய்வார்கள் மாநிலம் முழுவதும் இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கல்வி வட்டத்தில் பனைஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் , முருகன் தலைமை தாங்கினார்
ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளியின் தரம் உயர்த்துதல் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவைகள் குறித்து பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் கோட்டீஸ்வரன் , ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.