சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை அனுமதி ரத்து .

Update: 2021-04-21 03:15 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு கோடை காலங்களில். தமிழகத்தை சேர்ந்தவர்களும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளும் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காக்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சாத்தனூர் அணை பூங்கா மற்றும் முதலைப் பண்ணை ஆகியவை நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டடுள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களின் உத்தரவின் பேரில் சாத்தனூர் அணையின் பிரதான நுழைவாயிலை பொதுப்பணித் துறை பணியாளர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை சார்பில், சாத்தனூர் அணை பூங்கா அரசின் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் அதுவரை சுற்றுலா பயணிகள் யாரும் சாத்தனூர் அணைக்கு வரவேண்டாம் என்ற அறிவிப்பு பலகை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News