திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தவறவிட்ட செல்போன் ரூ.2000 உடனடியாக மீட்பு
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தவறவிட்ட செல்போன் ரூ.2000 பணம் உடனடியாக மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.;
தவறவிட்ட நபரிடம் செல்போன், பணம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் மற்றும் 2000 பணம் இருந்த கைப்பையை ஒருவர் தவறவிட்டார். இதுபற்றி அவர் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அரைமணி நேரத்தில் அதனை கண்டுபிடித்து செங்கம் காவல் ஆய்வாளர் சரவணன் உதவி ஆய்வாளர் சுமன் ஆகியோர் கண்டு பிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை பாராட்டினார்.